ETV Bharat / state

பேருந்தில் பயணச் சீட்டு கேட்ட மூதாட்டி மீது வழக்கா..?

author img

By

Published : Oct 1, 2022, 3:53 PM IST

Etv Bharat
Etv Bharat

பேருந்தில் பயண சீட்டு கேட்ட மூதாட்டியின் வீடியோ வைரலான நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக பொய்யான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்: மதுக்கரையில் அரசுப் பேருந்தில் ஓசி பயணச் சீட்டு வேண்டாம் என்று மூதாட்டி ஒருவர் நடத்துநரிடம் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த மூதாட்டி உள்பட நான்கு பேர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக காவல்துறையின் டி.எஸ்.ஆர் நகல் வெளியானது.

மூதாட்டி வீடியோ

அந்த வீடியோவில் திமுக குறித்து இழிவாகப் பேசப்பட்டதாகவும், இந்த வீடியோவை அதிமுக உறுப்பினர் பிருத்திவிராஜ் முகநூலில் பதிவேற்றம் செய்தாகவும் குற்றம்சாட்டி அதிமுகவைச் சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் மற்றும் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்ததாக கூறப்பட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த காவல் கண்காணிப்பாளர்

இந்த சம்பவத்தில் மதுக்கரையைச் சேர்ந்த மூதாட்டி துளசிஅம்மாள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், தற்போது வெளியாகியிருப்பது அதிகாரப்பூர்வமான டி.எஸ்.ஆர் காப்பி இல்லை. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். அமைச்சர் பொன்முடி பேருந்தில் மகளிர் ஓசியில் செல்வதாக பேசிய அடுத்த நாளே இந்த மூதாட்டி வீடியோ வெளியானது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் திடீர் உடல்நலக்குறைவு..கடலூரில் சிகிச்சையில் அமைச்சர் மெய்யநாதன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.