ETV Bharat / state

சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் நபர் யார்? - கோவையில் அதிர்ச்சி!

author img

By

Published : Feb 12, 2023, 11:15 PM IST

கோவை மேம்பாலங்களில் வரையப்பட்டு வரும் சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி விஸ்வஜன முன்னேற்ற கழகத்தினர் அழித்தது தெரியவந்துள்ளது.

சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் ஆசாமி யார்?- கோவையில் அதிர்ச்சி வீடியோ!
சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் ஆசாமி யார்?- கோவையில் அதிர்ச்சி வீடியோ!

சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் நபர் யார்? - கோவையில் அதிர்ச்சி!

கோவை: மாநகர பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கும் வண்ணம் கோவை மாநகராட்சி சார்பில் வண்ண வண்ண விழிப்புணர்வு ஓவியங்கள் வாசகங்கள் வரையப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழர் காப்பியங்கள் ஓவிய கதைகளாக வரையப்பட்டு வருகிறது. அதன்படி காந்திபுரம் மேம்பால தூண்களில் சிலப்பதிகார காப்பியத்தின் ஒரு பகுதி ஓவிய கதைகளாக வரையப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், வேல்முருகன் செயல்படுகிறார். அவர் அந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இச்செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ’விஸ்வகர்மா மக்களின் ஒருவர்களான பொற்கொல்லரை இழிவு படுத்தி தவறாக சித்தரித்து கோவலன் மரணத்திற்கும், சிலம்பை திருடியதற்கும் பொற்கொல்லர்கள் தான் காரணம் என ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகவும், இதற்கு தங்கள் விஸ்வஜன முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவிப்பதாகவும்’ அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறுத்து வீடியோ வெளியிட்டுள்ள அக்கழகத்தின் தலைவர் வேல்முருகன், ’கோவலன் மறைந்ததற்கு பொற்கொல்லர் தான் காரணம் என்று தவறாக சித்தரித்து ஓவியங்கள் வரையப்பட்டு வருவதை கண்டித்தும் கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அந்த ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'வரிச்சியூர் செல்வம் தான் மன்னிப்புக்கேட்டார்... நான் இன்னும் BJP தான்' - திருச்சி சூர்யா அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.