ETV Bharat / state

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 10 மணிநேரத்தில் மீட்பு!

author img

By

Published : May 6, 2019, 12:05 PM IST

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு நாள் குழந்தை கடத்தல் சம்பவத்தில், கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டதோடு, கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

pollachi-child-kidnap

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நரிக் கல்பதியைச் சேர்ந்த பாலன்-தேவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து ஆறு நாள் ஆன நிலையில் அக்குழந்தை கடத்தப்பட்டது. பிறந்து ஆறு நாள் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தை கடத்திய பெண்ணை தனிப்படை காவல் துறையினர் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்நிலையில், உடுமலை அருகே உள்ள குறிச்சிக் கோட்டையில் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை குழந்தையுடன் காவல் துறையினர் கைது செய்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அப்பெண் குறிச்சிக்கோட்டை ரங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் என்று தெரியவந்தது. மேலும், திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மாரியம்மாள் கடந்தாண்டு கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அவருக்குப் குறை பிரசவத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை இறந்துவிட்டதால், கணவர் உறவினர்களுக்குப் பயந்து மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தினார் என்பதும் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட குழந்தை 10 மணிநேரத்தில் மீட்பு

குழந்தை கடத்தப்படுவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 10 மணி நேரத்தில் கடத்திய பெண்னை கைது செய்து குழந்தையை போலீசார் மீட்டனர்
தன் குழந்தை குறை பிரசவத்தில் இறந்ததை கணவரிடம் மறைத்ததால் குழந்தையை கடத்தியதாக  பெண் வாக்குமூலம்
பொள்ளாச்சி : மே.6
பொள்ளாச்சி அருகே உள்ள நரிக் கல்பதியை சேர்ந்த பாலன் - தேவி தம்பதிருக்கு  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததது பிறந்து  ஆறு நாட்களான குழந்தையை  இன்று பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திய பெண்னை தனிப்படை  போலீசார் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்த நிலையில் உடுமலை அருகே உள்ள குறிச்சிக் கோட்டையில் கடத்திய பெண்ணை குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர் குறிச்சிக் கோட்டை ரங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் என்பதும் திருமணமாகி 5 வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் கடந்தாண்டு கற்பம் அடைந்துள்ளார் குறை பிரசவத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  குழந்தை இறந்து விட்டதால்  கணவர், உறவினர்களுக்கு பயந்து குழந்தை இறந்ததை மறைத்து ஆண்குழந்தை பிறந்ததாக கணவரிடம் பொய் கூறியதால்
குழந்தையுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அரசு மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை எடுத்துச் சென்று விடலாம் என்று எண்ணி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தியாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் குழந்தை கடத்தப்பட்டதற்கு வேறு ஏதாவது காரணங்கள் ?உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர் குழந்தையை மீட்டு வந்த காவல்துறையினர் குழந்தைகள் பெற்றோர்களிடம் படைத்தனர் குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.