ETV Bharat / state

கோவையில் பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்!

author img

By

Published : Dec 19, 2019, 10:47 AM IST

pocso
pocso

கோவை: போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம், தோழமை அறை ஆகியவை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளிக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்துக்கு 2018 ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாவட்டங்களில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஜூலை மாதம் உத்தரவிட்டது.

போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம்

அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 119 போக்சோ வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 84 முதல் தகவல் அறிக்கைகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

குழந்தைகளுக்கு தோழமை அறை

இதுதவிர, பாதிப்புக்குள்ளாகும் சிறார்களுக்கு ஆலோசனை அளித்து, ஆரோக்கியமான மனநிலைக்கு கொண்டு வர, குழந்தைகள் தோழமை அறையும் நீதிமன்றம் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

அதில், வண்ண ஓவியங்கள், டிவி, படுக்கை வசதி, நாற்காலி, மேசை போன்ற வசதிகள் ரூ.7 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தை கோவை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது!

Intro:போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றம் மற்றும் தோழமை அறை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளதால், தேக்கமடைந்துள்ள 125 போக்சோ வழக்குகள் விரைந்து தீர்வுக்காணப்படும் என ...Body:பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. குற்றவாளிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்துக்கு 2018 ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாவட்டங்களில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவுசெய்யப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 119 போக்சோ வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 84 முதல் தகவல் அறிக்கைகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இதுதவிர, பாதிப்புக்குள்ளாகும் சிறார்களுக்கு ஆலோசனை அளித்து, நல்ல மன நிலைக்கு கொண்டு வர குழந்தைகள் தோழமை அறையும் நீதிமன்றம் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அதில், வண்ண ஓவியங்கள், டிவி, படுக்கை வசதி, நாற்காலி, மேசை போன்ற வசதிகள் ரூ.7 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தை கோவை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.