ETV Bharat / state

மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூல்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

author img

By

Published : Jan 2, 2022, 3:56 PM IST

கோவையில்  அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் ரூ.3.18 கோடி மதிப்பில் சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகளை மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 95, 85, 92 ,99இல்(மேற்கு தோட்டம், திருமறை நகர், பி.கே.புதூர் பிரதான சாலை, குப்பண்ணன் தோட்டம்) பகுதிகளில் ரூ.187.2 லட்சம் மதிப்பில் தார் சாலைப் புதுப்பித்தல், மேற்கு மண்டலத்தில் வார்டு எண் 14இல் புவனேஸ்வரி நகரில் ரூ.43.50 லட்சம் மதிப்பில் தார் சாலைப் புதுப்பித்தல் ஆகியப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 200 கோடி மதிப்பில் சாலைகள் அமைத்தல், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை.

2018 முதல் விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு மட்டும் தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அது தெரியாமல் தற்போது வசூலிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் பல்வேறு பகுதிகள் கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மாநாகராட்சியில் குப்பைத்தொட்டிகள் மட்டுமல்லாமல் குப்பை அள்ளும் வாகனங்களிலும் தவறு நடந்துள்ளது. இதுதான் அதிமுகவின் சாதனையா? திமுகவின் இந்த எட்டு மாத காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பது மக்களுக்குத் தெரியும்" எனக் கூறினார்.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

போத்தனூர் திருமறை நகர்ப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரை சந்தித்து பொன்னாடை அணிவிக்க வந்த ஒருவரை, திமுகவினர் சிலர் தடுத்தி நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.