ETV Bharat / state

''சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை... நீதிமன்றம் செல்ல முடிவு'' - அமைச்சர் கே.என். நேரு!

author img

By

Published : May 8, 2023, 7:30 PM IST

கோவையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு
Etv Bharat கோவையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு

சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டிய விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து வஉசி மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

அதுபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

அதேபோல வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூபாய் 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாளை சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டுதல், வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தையை திறந்து வைத்தனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''கோவையில் சாலைகள் இரண்டு ஆண்டுகளில் பழுதடைந்தது போல வீடியோ வெளியிடப்படுகிறது. கடந்த காலங்களில் போடப்படாத சாலைகளை போட வேண்டும் என்பது கோரிக்கை. தற்போது இரண்டு ஆண்டுகளில் மக்கள் பணிகளை செய்து முடித்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். தற்போது விடுபட்ட பணிகள் 860 கோடி ரூபாய் நிதி கொடுத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ''இனி இரு பக்கமும் கழிவு நீர் ஓடை கட்டி சாலைகள் போடப்படும். கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளன. கோவை குடிநீர் பிரச்னை நாடறிந்தது. சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தர முடியவில்லை. தரவும் இல்லை. கோவை எம்.பி. நடராஜன் சொல்லி தண்ணீர் தந்தார்கள்.

170 mld பில்லூர் திட்டத்தில் தண்ணீர் வழங்குகிறோம். கரூரை விட கோவைக்குத் தான் அதிகம் செய்ய வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கேட்கிறார். நான் அடிப்படையில் ஒரு விவசாயி. 15 மாதத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்புத் தந்துள்ளார். ஆகவே, அவர் கேட்கும் பணியை கோவையில் நாங்கள் செய்வோம்'' எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் நேரு, ''கோவையில் ரூ. 1010.19 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களிடம் கூறியுள்ளோம். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்.. விவசாயிகள் போராட்டம்.. முதலமைச்சரிடம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.