ETV Bharat / state

சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ்மொழி அவசியம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : Jun 26, 2023, 8:30 PM IST

Etv Bharat
Etv Bharat

அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழி கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ பள்ளியாக இருந்தாலும் அங்கு தமிழ்மொழி கற்றுத் தரப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெறிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ்மொழி அவசியம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

கோயம்புத்தூர்: கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வென்டில் தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 350 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் ஆணை வழங்கினோம். இன்று கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 350 தனியார்ப் பள்ளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.

தனியார் பள்ளிக்கு அங்கீகார ஆணை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படக்கூடாது என நேரடியாக வந்து வழங்கப்படுகிறது. தனியார்ப் பள்ளிகளை நாடி வருகின்ற மாணவர்களுக்கு எல்லாவிதத்திலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ளது.

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் சி.இ.ஒ கள் மூலம் ஆய்வுகள் செய்து அங்கீகாரம் பெறாத தனியார்ப் பள்ளிகளை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு, அதற்கான கால அவகாசமும் வழங்கப்படுகிறது.பள்ளி கட்டிடங்களுக்கு என்று தனி விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைக்கு உட்பட்டு பள்ளி கட்டிடங்கள் கட்டியுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழி கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ பள்ளியாக இருந்தாலும் அங்கு தமிழ்மொழி கற்றுத் தரப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்படுகிறது. இது போல ஆய்வு மேற்கொள்வதால் அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழி கற்பிக்க வசதிகள் செய்து வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளி குழந்தைகள் நமது தாய் மொழியான தமிழ்மொழியை எளிதாக எழுத, படிக்க மேற்கொள்ளும் வகையில் எல்லா வசதியும் தர வேண்டும் என்ற முறையில் அரசு செயல்படுகிறது.

டெட் தேர்வு (TET Exam) முடித்தவர்கள் இன்று ஏறத்தாழ 80 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். இருந்தாலும் தீர்வு காண வேண்டும் என்று முயற்சிக்கப்படுகிறது. அதற்காகக் கடந்த வாரம் ஒவ்வொரு சங்கத்தையும் சார்ந்து இருபது மணி நேரம் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக என்ன தீர்வு காண வேண்டும் என அறிந்து விரைவில் செயல்படுத்தப்படும்.2021 ஆம் ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியானது தொடர்பாக விசாரித்தபோது, 2018 ஆம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களின் தகவல்களே வெளியாகியுள்ளது. இனிமேல் இதுபோல தகவல்கள் வெளியாகாதபடி கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

185 ஊராட்சிகள் இருக்கின்ற தொடக்கநிலை பள்ளிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைப் பொருத்தவரை நபார்டு வங்கி (NABARD Bank) நிதிக்காக அரசு காத்திருக்கிறது. எங்கெல்லாம் மரத்தடியிலும், திறந்தவெளியிலும் இருந்து மாணவர்கள் படிக்கிறார்களோ அவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நபார்டு வங்கியிலிருந்து பணம் வந்தவுடன் உடனடியாக அவர்களுக்குப் பள்ளி கட்டிடங்கள் கட்டி தரப்படும்.காலை உணவு திட்டத்தில் சத்துணவு பணியாளர்களைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்குக் காலை உணவுத் திட்டம் சமூக நலத்துறை சார்ந்தது. எனவே, சமூக நலத்துறை அமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பார்." என கூறினார்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பெருங்களத்தூர் மேம்பாலத்தை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.