குண்டம் திருவிழாவை முன்னிட்டு 85 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது

author img

By

Published : Jan 21, 2023, 2:32 PM IST

குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடிக்கம்பம் நடப்பட்டது

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே 85 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டது

குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடிக்கம்பம் நடப்பட்டது

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழாவில் கோவை மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டு மக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்குவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்குவதை ஒட்டி இதற்காக நேற்று முன்தினம் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 85 அடி உயரம் உள்ள மூங்கில் கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் ஆழியார் ஆற்றங்கரையில் கொடி கம்பத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசி புடவை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின் பூஜைகள் செய்யப்பட்டு மாசாணி அம்மன் கோவில் நற்பணி மன்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ராஜகோபுரம் அருகே காலை 8 மணி அளவில் கொடிக்கம்பம் நடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் மயான பூஜையும் ஆறாம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் Rozgar Mela திட்டத்தின் மூலம் 91 இளைஞர்களுக்கு பணி ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.