ETV Bharat / state

"தேசிய பேரிடர் நிதியாக முதலமைச்சர் கேட்ட ரூ.5,000 கோடி போதாது" - தொழிற்துறையினர் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோவையில் டிச.12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், அதனை டிச.27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளாக அறிவித்துள்ளது. மேலும் தேசிய பேரிடர் நிதியாக முதலமைச்சர் கேட்ட ரூ.5,000 கோடி போதாது என தொழிற்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மிக்ஜாம் புயலால் ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், 'மிக்ஜாம் புயல் வெள்ளம் புனரமைப்பு வழிகள் செய்கின்றனர். இதில் தொழில் துறையினர் புறக்கணிப்படுகிறோம். அம்பத்தூர் எஸ்டேட்டில் நிறுவனங்களின் இயந்திரங்கள் நீரில் மூழ்கி சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு, முழுமையாக தொழில் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் தொழில் முடங்கியுள்ளது. ஒரு சில தனியார் தொழில்பேட்டை இருந்தாலும், பெரும்பாலும் அரசு தொழில்பேட்டை தான் உள்ளது. அரசை நம்பியே நாங்கள் முதலீடு செய்துள்ளோம். மொத்தமாக புயல் வெள்ளம் காரணமாக தொழில்முறையினருக்கு சுமார் 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் தொடச்சியாக தொழில் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொடங்கி, மூலப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய நிவாரண நிதி தொழில்துறைக்கு சேராது. தொழிற்துறையை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினோம். மத்திய அரசு ஏற்க வேண்டும் தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண்டும்.
சில நிறுவன இயந்திரத்திற்கு காப்பீடு இருக்காது.

இதையும் படிங்க: மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறையினர் அறிவிப்பு!

இதனால், தொழில்துறையினர் நிர்கதியாக நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். பேரிடரில் இருந்து மீண்டும் திரும்பி வர 6 மாதம் ஆகும். மத்திய மாநில தொழில்துறையை பாதுகாக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

ஆனால் 2 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்தும் வரும் 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த இருந்தோம், புயல் வெள்ளம் காரணமாக மனித சங்கிலி போராட்டம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றி ஒத்திவைக்கப்படுகிறது' எனக் கூறினார்.

பின்னர் பேசிய சென்னை சிறுகுறு தொழில் அமைப்பு துணைத் தலைவர் மோகன், 'மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் அனைத்து துறையும் தத்தளிக்கிறது. புது நிறுவனம் துவங்க முடியவில்லை, பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போது, ஒரு ரூபாய் கூட நிவாரணம் கிடைக்கவில்லை.

ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணம் போதாது: தேசிய பேரிடர் நிதியில் முதல்வர் கேட்ட ரூ.5 ஆயிரம் கோடி போதாது, தேசிய பேரிடர் நிதியில் தொழில்துறையினருக்கான நிதியை கேட்க வேண்டும். சிறு குறு தொழில்துறையில் எலக்ரானிக் பொருட்கள் காப்பீடு பெற முடியாது.

ஆகவே, தலைமை செயலாளர் தலைமையில் காப்பீட்டு நிறுவனங்களை அழைத்து எந்த வகையில் உதவ முடியும் என ஆலோசனை செய்ய வேண்டும். வங்கி கடன் நெருக்கடியும் உள்ளது, எனவே பேரிடர் காலத்தில் 3 மாதத்திற்கு கடன் வட்டியை தள்ளி வைக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த 2 மாதத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.