ETV Bharat / state

’எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இளையராஜா இசையமைத்தார்’- இயக்குநர் கண்ணுச்சாமி நெகிழ்ச்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 10:55 PM IST

vattara valaku  film crew
வட்டார வழக்கு பட குழுவினர்

Director Kannuchamy Ramachandran: எந்த எதிர் பார்ப்புகளும் இல்லாமல் வட்டார வழக்கு படத்திற்கு இளையராஜா இசையமைத்தார் என இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் வட்டார வழக்கு. இதில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், நடிகை ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

கதை: 80 காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கிடையேயான பகைதான் வட்டார வழக்கு படத்தின் கதை. இந்த பகையுணர்வு இரண்டு குடும்பங்களில் உள்ள பலரையும் காவு வாங்குகிறது. இதற்கிடையே காதல் மலருகிறது, இறுதியில் பகை வென்றதா அல்லது காதல் வென்றதா என்பதே படத்தின் கருவாகும். கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களைச் சந்தித்த, வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசுகையில் “இத்திரைப்படம் 1985-ல் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்டது.

இதில்,யாரும் செருப்பு அணிந்திடாத ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாகக் கிராமத்துப் பின்னணியில் இருப்பதால், இசைஞானியை அணுகியதாகக் குறிப்பிட்ட அவர்,இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார்.

அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரிய பலம். என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும், அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இந்த படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர்.

இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்குக் கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ரவீனா ரவி பேசுகையில் “ பின்னணி குரல்கள் நிறையப் பலபேசி இருந்தாலும் இந்த படத்தில், கிராமத்துப் பேச்சு வழக்கைப் பேசுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டேன். சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான் என்றாலும், இது போன்ற கிராமத்துப் பின்னணி படங்களில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூர்யா 43; தீ குரலில் உருவாகும் முதல் பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.