ETV Bharat / state

கோவையில் அதிரடி சோதனையின்போது சிக்கிய குட்கா பொருட்கள்!

author img

By

Published : Dec 17, 2019, 9:23 AM IST

gutkha seized
gutkha seized

கோவை: உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் புகையிலை, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிக்கவும் விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார். ஆனாலும், தடையை மீறி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குட்கா பொருட்களை பறிமுதல் செய்யும் உணவு பாதுகாப்புத்துறை

அவ்வப்போது அரசு அலுவலர்கள் நடத்தும் சோதனையில் போதை பொருட்கள் பிடிபட்டாலும், சட்டவிரோதப்போக்குகளும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கோயம்புத்தூரில் நேற்று (டிச.16) மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடக்கப் பள்ளியை திணறவைத்த காட்டு யானைகள்

Intro:கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.Body:தமிழகத்தில் புகையிலை, பான், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டு கடைகளில் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கோவையில் இன்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு லடசம் ரூபாய் மதிப்பு.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.