ETV Bharat / state

'வாட்ச்மேன் டிரஸ் போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறார் மோடி' - கரு.பழனியப்பன் குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 11, 2019, 2:55 PM IST

கோவையில் கரு.பழனியப்பன் பரப்புரை

கோவை: "பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி, இப்போது வாட்ச்மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார்" என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்தார்.

கோவை மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, அந்த பொய்யினாலேயே வீழப்போகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சிலர் மீம்ஸ் போட்டார்கள். அது நக்கலுக்கு போட்டது என்று தெரியாமல் அதற்கும் பாஜகவினர் வக்காலத்து வாங்குகின்றனர். அதிமுகவும் சரி... பாஜகவும் சரி... பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றி எங்குமே சொல்வதே இல்லை.

5 வருசமாக எதுவும் செய்யாமல் இப்போது பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜிஎஸ்டி வரியை குறைப்பேன் என்கிறார். எந்த கூட்டத்திற்கு வந்தாலும் காவி சட்டையுடன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்கு கேட்கின்றார். அவர் ஜெயித்து வந்தால் உங்களுக்கு காவி சட்டையை போட்டுவிடுவார்.

கோவையில் கரு.பழனியப்பன் பரப்புரை

இந்துக்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிசுவாமியால் உட்கார முடியும், பொன்ராதாகிருஷ்ணனால் உட்கார முடியாது. தமிழிசை ஒருபோதும் நிர்மலா சீத்தாராமன் ஆக முடியாது. பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி இப்பொது வாட்ச்மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.      கோவை



மத்திய அரசின்  நாட்கள் எண்ணப்படுவதால் புதிதாக 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு விரைவில்  அனுமதி கொடுத்து விடுவார்கள்  எனவும் அப்படி அனுமதி கொடுத்தாலும் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.அப்போது பேசிய கரு.பழனியப்பன்,
பா.ஜ.க தொடர்ந்து பொய்கள் மூலமாகவே ஆட்சியை பிடிததது, ஆட்சி செய்தது என தெரிவித்தார்.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது எனவும் , அதை நக்கலடித்து சிலர் மீம்ஸ் போட்டார்கள் , அது நக்கலுக்கு போட்டது என்று தெரியாமல் அதற்கும் பா.ஜ.கவினர் வக்காலத்து வாங்குகின்றனர் என தெரிவித்தார்.
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அந்த பொய்யினாலேயே வீழ போகின்றது என கூறிய அவர்,அதிமுகவும் சரி, பா.ஜ.கவும் சரி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றி எங்குமே
சொல்வதே இல்லை எனவும் தெரிவித்தார்.
இப்போது பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜி.எஸ்.டி வரியை குறைப்பேன் என்கின்றார் என கூறிய அவர்,5 வருசமா எதுவும் செய்யாமல் இப்போது  செய்துவிடுவதாக சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்வதாகவும் தெரிவித்தார்.இந்துகள் சுயமரியாதையோட வாழ வேண்டும் என்றால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறிய அவர்,சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிசாமியால் உட்கார முடியும், பொன்ராதாகிருஷ்ணனால் உட்கார முடியாது என கூறிய அவர்,தமிழிசை சௌந்தராஜன் ஒரு போதும் நிர்மலா சீத்தாராமன் ஆக முடியாது எனவும் தெரிவித்தார்.எந்த கூட்டத்திற்கு வந்தாலும் காவி சட்டையுடன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்கு கேட்குகின்றார் எனவும் 
ஜெயித்து வந்தால் உங்களுக்கு காவி சட்டையை போட்டுவிடுவார் எனவும் தெரிவித்தார்.
சிபிஎம் வேட்பாளர் கணவனும் மனைவியும் பொது பிரிச்சினைக்காக போராடுபவர்கள் என கூறிய அவர்,பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி இப்பொது வாட்ச் மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார் எனவும் தெரிவித்தார்தேர்தலில் go back modi சொல்வதுதான் முக்கியம் என கூறிய அவர்,
ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்பை விசாரிப்போம்  என று சொன்ன ஒரே வேட்பாளர் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மட்டுமே எனவும் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ,
தேர்தல் ஆணையம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவித்துள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் சென்ற பின்னர் இப்போது தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டு இருப்பதாகவும்,
இது திமுக அணிக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.ஓரே நேரத்தில் இடைதேர்தல் வைக்க கோரிக்கை விடுத்த போதே, தேர்தல்  அறிவித்து இருந்தால் 500 கோடி மிச்சமாகி இருக்கும் என தெரிவித்த அவர், இது நிர்வாக சீர்கேட்டை காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.ஹைட்ரோ கார்பன், மீத்தேன்  எடுக்க மோடி அரசு குறியாக இருக்கின்றது என கூறிய அவர், புதிதாக 341 கிணறுகள்  அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க வேதாந்த, ஒ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய சுற்று சுழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன எனவும், இதற்கும்  உடனடியாக அனுமதி கொடுத்துவிடுவார்கள் எனவும் தெரிவித்தார். மத்திய அரசின்  நாட்கள் எண்ணப்படுவதால் இதற்கு  அனுமதி சீக்கிரம் கொடுத்து விடுவார்கள்  என கூறிய அவர்,
இதனால் இயற்கை வளம் அழிந்து போகும் எனவும், காவிரி பசுமை மண்டலமே அழிந்து் போகும் எனவும்,  லட்சக்கணக்கான விவசாய நிலங்கள்  பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
காரப்பரேட் நிறுவனங்களுக்கு இயற்கை  வளங்கள் தாரை வார்க்கப்படுகின்றன என கூறிய அவர்,இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் புதிய கிணறுகளுக்கு அனுமதி கொடுத்தாலும் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.
இதை அவர்கள் ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளின்  தொடர்ச்சி என்று கூறுவார்கள் எனவும்,  சட்டத்தை மீற அவர்களுக்கு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கின்றது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.