ETV Bharat / state

Covai:ரூ.1-க்கு மதிய உணவு..! எளியோரின் பசியைப் போக்கும் அறக்கட்டளைக்கு குவியும் பாராட்டு

author img

By

Published : Jun 28, 2023, 6:16 PM IST

கோவையில் 1 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் தனியார் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Etv Bharat
Etv Bharat

Covai:ரூ.1-க்கு மதிய உணவு..! எளியோரின் பசியைப் போக்கும் அறக்கட்டளைக்கு குவியும் பாராட்டு

கோவை: வாட்டும் கோடை வெயில், வதைக்கும் குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் நமக்கு பசி ஏற்பட்டுவிட்டால், வேறெந்த வேலைகளையும் செய்யத் தோன்றது. பசிக்கும்போது நேரத்திற்கு எல்லோருக்கும் உணவு கிடைப்பது என்பது கிடையாது. இந்த நிலையில், இவ்வாறு நேரத்திற்கு உணவின்றி பசியால் வாடும் ஏழை எளிய மக்களின் துயரைப் போக்கி, உணவளிக்கும் பணியை கோயம்புத்தூரில் தெய்வேந்திரன் அறக்கட்டளை மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.

இதற்கு இந்த அறக்கட்டளை பெறும் தொகையோ ஒரு ரூபாய் மட்டுமே என்பது மற்றொரு சிறப்பு. இதனால், தினமும் ஒரு ரூபாய்க்கு இந்த அறக்கட்டளையினர் அளிக்கும் உணவைப் பெற ஏழை எளியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று அவற்றை உண்டு மகிழ்கின்றனர்.

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை, பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர், ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். ஐந்து விதமான வெரைட்டி சாதங்களை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் வழங்கி வருகின்றனர். இந்த உணவைப் பெற, கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை புரிந்து நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: மாமன்னன் படத்தைத் திரையிட்டால் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்; பூலித்தேவர் மக்கள் முன்றேற்றக் கழகம் மிரட்டல்!

மதியம், 12:30 மணி முதல் உணவு வழங்கும் இவர்களிடம் தினமும் ஐநூறு பேர் வரை உணவு வாங்கிச் செல்கின்றனர். தினமும் ஒரு வெரைட்டி ரைஸ் என்ற வகையில், வெரைட்டி சாதம் பொட்டலமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே, பல்வேறு சேவைகளை செய்து வரும் இந்த அறக்கட்டளையினர், இதன் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கத்தில், வாரத்தில், 5 நாட்கள் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்தத் திட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவத்துறையில் AI-யின் அசத்தல் பங்கீடு: X-ray ஆய்வு வல்லுநர்களின் நிலை கேள்விக்குறியா?

இங்கு உணவு வாங்க வருபவர்கள் ஒரு ரூபாயை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்துகின்றனர். இதில் கிடைக்கும் பணம் கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதாக அறக்கட்டளையினர் கூறுகின்றனர். இந்த சேவையைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்கு ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாது, வசதி படைத்தவர்களும் வந்து வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பளு தூக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்ய வேண்டும் - தங்கப்பதக்கம் வென்ற ஆதர்ஷ் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.