கோவை: மதுக்கரை அடுத்த குவாரி ஆபீஸ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சிவராமன் (18). கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவராமன் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெப்பமடைந்து தீப்பிடித்துள்ளது. இதையடுத்து மெத்தையிலும் தீப்பரவியது. இதில் சிவராமன் பலத்த தீக்காயமடைந்த நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சிவராமன் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: அசைவ, மதுப்பிரியர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நாள் மாற்றியமைப்பு