ETV Bharat / state

சிறிய ரக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி - பயிற்சி பட்டறையை தொடங்கிய தனியார் கல்லூரி!

author img

By

Published : Jan 21, 2021, 9:30 PM IST

Updated : Jan 21, 2021, 11:01 PM IST

science
science

கோயம்புத்தூர்: அப்துல்கலாம் கனவை நனவாக்கும் விதமாக கணியூரில் உள்ள கே.பி.ஆர் கல்லூரி சார்பில் 100 பள்ளி மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து உருவாக்கிய சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கும் பயிற்சி பட்டறையை கோவை மாவட்டம் கணியூர் அருகே உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி தொடங்கியுள்ளது. இப்பயிற்சி வருகின்ற பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வரை நடைபெறும். பயிற்சியின் இறுதியில் பிப்ரவரி 7ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பலூன்கள் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளனர்.

இந்த பயிற்சியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த சிறிய அளவிலான செயற்கைக்கோள், விவசாயம், அண்ட கதிர் வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு, இயற்கை கலப்புபொருட்கள் அதிர்வு, காற்றின் வேகம், புவிவெப்பமடைதல், ஓசோன் மண்டலம் தொடர்பான விவரங்களை தர இருக்கிறது. இதற்கான பயிற்றுவித்தலை அப்துல் கலாம் சர்வதேச விண்வெளி மையம் மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கும் பயிற்சி
சிறிய ரக செயற்கைக்கோள்

இதையும் படிங்க: மறைமுக ஏல முறையில் நெல், எள் போன்ற தானியங்கள் ஏலம்

Last Updated :Jan 21, 2021, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.