ETV Bharat / state

”வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்” - எல்.முருகன்

author img

By

Published : Feb 14, 2021, 10:50 PM IST

Bomb blast mouring in covai
Bomb blast mouring in covai

கோவை: வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்குமான தேர்தல் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். இன்று அவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் 23ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கேரள இந்து தர்ம பேராசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, ”தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அழிக்கின்ற முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் பலரும் பாரத் மாதா கி ஜே என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையாக நினைக்கின்றனர், திராவிட கட்சிகளின் சரித்திரத்தை ஒழிக்க வேண்டும், தேர்தலுக்குப் பிறகு பாஜக உறுப்பினர்கள் பெரிய அளவில் சட்டப்பெரவையில் அமர்வார்கள். 2021 தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை

அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், ”இந்து, தமிழ் கலாசாரத்திற்கு எதிராக திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்துக்களை கொச்சைப் படுத்துபவர்கள் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை நாம் முறியடிக்க வேண்டும். திமுகவினர் வேலெடுத்து இருப்பது இந்து மக்களை ஏமாற்றும் செயல். பாஜக வெற்றி யாத்திரைக்கு கிடைத்த பேராதரவே ஸ்டாலினையும் வேல் ஏந்த வைத்திருக்கிறது. திமுக தமிழர்களுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் எதிரானது. தற்போது வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன்

இதையும் படிங்க:

மெட்ரோவில் பயணித்த ராயபுரத்தின் செல்ல பிள்ளை ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.