ETV Bharat / state

CCTV: உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் அச்சத்தில் மக்கள்

author img

By

Published : Dec 6, 2022, 4:18 PM IST

உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் கட்டுமானத் தொழிலாளர்களின் கொட்டகைக்குள் நுழைய முயன்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

காட்டு யானை
காட்டு யானை

கோவை: உணவு, தண்ணீர் தேடி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி காட்டு யானைக் கூட்டம் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்திற்குள் 4 காட்டு யானைகள் நுழைந்தன. ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம் பயிர்களைச் சேதப்படுத்தின. தொடர்ந்து அதேபகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டு இருந்த இடத்திற்குள் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் உணவு ஏதும் உள்ளதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

கட்டுமானத்தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையை முட்டித் தள்ளிய காட்டுயானை, அங்கிருந்த தகர சீட்டுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடின. காட்டுயானைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க தகர கொட்டகைக்குள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் நூலிழையில் தப்பினர். யானைக் கூட்டத்தின் அட்டகாசம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது.

யானைகள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியான நிலையில், வனத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டுயானை - சிசிடிவி

இதையும் படிங்க:காவி உடை,நெற்றியில் விபூதியுடன் அம்பேத்கர்: குருமூர்த்தி கைது - திருமாவளவன் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.