ETV Bharat / state

பிரபல ஆங்கில நாளேட்டில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர் தற்கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 9:48 PM IST

YOUNG WOMAN JOURNALIST SUICIDE
பெண் பத்திரிகையாளர் வீட்டில் தற்கொலை செய்த துயரம்

Young woman journalist suicide: பிரபல தனியார் ஆங்கில நாளேட்டில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா பெல்சின் (27). இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் திரைப்படம் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வருகிறார். பிரபல தனியார் ஆங்கில நாளேட்டில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், அமைந்தகரை பகுதியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் . முதல்முதலாக இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கிய தனியார் கலாச்சார யூடியூப் சேனலில் அவரது பணியைத் தொடங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, கலாச்சார யூடியூப் சேனலில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சவுண்ட் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார்.

பின்னர், இவர் பிரபல ஆங்கில நாளேட்டில் பணியில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்படி சமூக வலைதளத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான சினேகா பெல்சின், நேற்று முன்தினம் இரவு தனது தாயாரிடம் அலைபேசியில் பேசிவிட்டு, அவருக்கு "Miss u mom" என உருக்கமாக குறுஞ்செய்தியை பகிர்ந்துவிட்டு அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.

YOUNG WOMAN JOURNALIST SUICIDE
பெண் பத்திரிகையாளர் வீட்டில் தற்கொலை செய்த துயரம்

சினேகா பெல்சினின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகம் அடைந்த அவரின் தாயார் எதிர் வீட்டில் உள்ள மனோகரன் என்பவரை தொடர்பு கொண்டு அவரது மகளை அழைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் சினேகாவின் வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவை தட்டி உள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தவர், அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கதவை உடைத்து பார்த்தபோது சினேகா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சினேகாவின் தங்கை ஸ்வேதா, கடந்த 2016ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு இறந்தாகவும், அதிலிருந்து மன அழுத்ததில் இருந்த வந்த சினேகா அதற்கான சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

உடற் கூராய்விற்கு பிறகு, அவரது உடல் அவரின் சொந்த ஊரானா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த அமைந்தகரை போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு பலே நாடகம்.. முறையற்ற உறவால் விபரீதம்.. பலே பெண் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.