காமன்வெல்த் கராத்தே போட்டி: வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : Sep 13, 2022, 10:17 PM IST

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று: தமிழ்நாடு திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் காமன்வெல்த் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை: லண்டன் பர்மிங்கம் நகர் பல்கலைக்கழத்தில் 7 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜெயந்த் மற்றும் திஷிதா ஆகிய பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் பங்கேற்றனர். இதில் ஜெயந்த் 2 வெண்கலப் பதக்கங்களும், திஷிதா ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மாணவி திஷிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'போட்டி மிகவும் கடினமாக இருந்தது. பேச்சாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு காரணமாக கடுமையாகப்பயிற்சி மேற்கொண்டதன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். வரும் காலங்களில் அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்வேன்.

பெண்கள் அனைவரும் கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற விளையாட்டுகள் போல கராத்தேக்கும் தமிழ்நாடு அரசு உதவிகளை செய்ய வேண்டும்' இவ்வாறு கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பேச்சாளர் ஷிகான் கஜேந்திரன் கூறுகையில், 'காமன்வெல்த் போட்டியில் 21 நாடுகள் பங்கேற்ற நிலையில் அதில் இந்தியா 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 1000 பேர் கலந்து கொண்ட போட்டியில் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.

காமன்வெல்த் கராத்தே போட்டி: வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

மேலும் இதுபோன்று அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்' இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை ஒபன் டென்னிஸ் ... இந்திய வீராங்கனை தண்டி கர்மன் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.