ETV Bharat / state

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி: மகிழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த்!

author img

By

Published : Aug 8, 2022, 9:54 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன் ஆனந்த்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன் ஆனந்த்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய கிராண்ட் மாஸ்டரும் சர்வதேச கூட்டமைப்பு துணைத்தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்புத் தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச் மற்றும் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சென்னை மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது முதலில் பேசிய சர்வதேச கூட்டமைப்பு தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச், "சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நான்கு மாதங்களில் அனைத்து பணிகளையும் செய்துகொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் எனது நன்றி.

மகிழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த்

தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், இன்னும் நான்கு ஆண்டுகளில் ஏற்கனவே செய்துவந்த பணிகளை துரிதப்படுத்தி முடிப்பேன். அதுமட்டுமின்றி பெண்களுக்கான செஸ் என்பதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். செஸ் கூட்டமைப்பின் நிதியை அதிகரிக்க அனைத்து நாடுகளிலிருந்தும் ஸ்பான்சர்ஷிப் கடைக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் 'Chess for disabilities', 'chess for orphanage' என பல்வேறு திட்டங்களை கொண்டுவர முடிவு செய்திருக்கிறேன். இந்த முறையை மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தேன் அதிக நேரம் கிடைக்காததால் அதை நடத்த முடியவில்லை அடுத்த ஒலிம்பியாட் போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என செஸ் போட்டி நடைபெறும். 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறும் " என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சர்வதேச கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், "44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சர்வதேச கூட்டமைப்புக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பிடே துணைத் தலைவர் பதவியை ஒரு படியாக வைத்து செயல்படுவேன். தமிழ்நாட்டில் என்னென்ன சர்வதேச போட்டிகளை நடத்த முடியும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம். நாம் ஏற்கனவே செஸ்-ல் முன்னணியில் இருக்கிறோம். இப்போது சிறந்த அமைப்பாளராக இருக்கிறோம். செஸ் போட்டி நடத்துவதில் அரசின் தலையீடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியை காண்பதற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வந்தது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு செஸ் போட்டியை காண்பதற்கு இவ்வளவு மக்கள் கூட்டத்தை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை இது தற்போது சென்னையில் நடப்பதால் இதனால் பெருமை கொள்கிறேன். இந்திய அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. அனைவரும் ஒப்புக்கொன்றார்கள் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலே இதுதான் சிறந்தது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த எங்களுக்கு குறைந்த காலம் கொடுக்கபட்டமையால் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப் பிரிவு ஒதுக்கி போட்டி நடத்த இயலவில்லை. ஆனால், வரும் காலத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்னென்ன செய்ய முடியும் என்பதை ஆலோசித்து செய்ய காத்திருக்கிறேன். இளைஞர்கள் நன்றாக செஸ் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது செஸ் போட்டிக்கு நல்ல நேரம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் சரத் கமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.