ETV Bharat / state

'முரசொலியோ, சிறுதாவூரோ பஞ்சமி நிலமாக இருந்தால்... ஆணையம் செயல்பட ஆணையிடுங்கள் முதலமைச்சரே!'

author img

By

Published : Oct 19, 2019, 5:13 PM IST

thol.thirumavalavan

சென்னை: பஞ்சமி நிலம் குறித்த விவாதம் வலுத்துவரும் நிலையில் முரசொலி அலுவலகமாக இருந்தாலும் சரி சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் சரி, அவை பஞ்சமி நிலம்தானா என்பதைக் கண்டறிய முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என்று தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் விடுதலை ஞாயிறு சிறப்புக் கருத்தரங்கம் சென்னை கெல்லீஸிலுள்ள லைட் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "காங்கிரஸ் ஆண்டாலும் சரி பாஜக ஆண்டாலும் சரி வெளியுறவுக் கொள்கை சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பது நாம் உணர வேண்டிய ஒரு உண்மை. அதன் அடிப்படையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பொய்த்துப்போனது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பஞ்சமி நிலம் குறித்து பேசிய திருமாவளவன்

ராஜேந்திர பாலாஜி விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், "சிறுபான்மை மக்கள் குறித்து தான் பேசவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துவருகிறார். ஆனால், அவர் அவ்வாறு பேசியிருக்க வாய்ப்புள்ளது. அதிமுக அரசு பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு பாஜகவிற்கு ஒத்து ஊதக்கூடிய அரசாக இருந்துவருகிறது. அமைச்சர்களும் அதற்கேற்றாற்போல் கருத்து தெரிவிக்கின்றனர். இதில், ராஜேந்திர பாலாஜியின் வாய்ஸ் என்பதைவிட பாஜகவின் வாய்ஸ் என்றே கூற வேண்டும்" என விமர்சித்துப் பேசினார்.

பஞ்சமி நிலம் விவகாரம் குறித்து பேசிய அவர், பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டிதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆணையம் ஒன்றை நியமித்ததைக் குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆணையம் தற்போது அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த திருமாவளவன், அது முரசொலி அலுவலகமாக இருந்தாலும் சரி சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் பஞ்சமி நிலம்தானா என்பதை கண்டறிவதற்கு கருணாநிதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தை செயல்பட அனுமதிக்க ஆணையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'நில அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

Intro:Body:தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் விடுதலை ஞாயிறு சிறப்பு கருத்தரங்கம் சென்னை கெல்லீஸிலுள்ள லைட் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அவர்களை விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்பயில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஓராண்டு அது கடந்துவிட்டது. தற்போது ஆளுநர் அதற்கு முதல்வரிடத்தில் பதில் அளித்துவிட்டார் என்று தகவல்கள் வெளிவருகின்றன. இது அதிகாரப்பூர்வ பதிலா என்பதை முதல்வர் அறிவிக்க வேண்டும். ஆளுநர் மறுத்தலித்திருப்பார் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.

காங்கிரஸ் ஆண்டாலும் பி.ஜே.பி ஆண்டாலும் வெளியுறவு கொள்கை சிங்களவர்களுக்கு ஆதரவாகதான் இருக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒரு உண்மை. அந்த அடிப்படையில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அது பொய்த்துபோனது. இது எதிர்ப்பார்த்த ஒன்றுதான். மீண்டும் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். அவ்வாறு இரண்டாவது முறை அனுப்பும் பட்சத்தில் ஆளுநர் அதை மறுதலிக்க முடியாது சட்ட வல்லுநர்கள் கருத்து கூறுகிறார்கள். எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றவில்லை என்றால் தமிழக அரசு பி.ஜே.பி அரசுக்கு ஏழு பேர் விடுதலையில் ஒத்துழைக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள நேரும்.

சிறுபான்மை மக்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு பேசியாருக்க வாய்ப்புள்ளது என்று கண்டன அறிக்கையை வெளியிட்டோம். அ.தி.மு.க அரசு பி.ஜே.பி யுடன் கூட்டணி வைத்த பிறகு பாரதிய ஜனதாவுக்கு ஒத்து செயல்படக் கூடிய அரசாக இருந்து வருகிறது. அமைச்சர்களும் அப்படிதான் கருத்து சொல்கின்றனர். உள்ளபடியே அது ராஜேந்திர பாலாஜியின் வாய்ஸ் என்பதைவிட பி.ஜே.பி யியைய் வாய்ஸ் என்றே கூற வேண்டும்.

பஞ்சமி நிலங்களை கண்டறிவதற்கு வேண்டிதான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணையம் ஒன்றை நியமித்தார். அந்த ஆணையம் தற்போது அ.தி.மு.க ஆட்சியில் செயல்படாமல் இருக்கிறது. எனவே முதல்வர் அவர்கள் உடனடியாக பஞ்சமி நிலங்களை கண்டறிவதற்கு அது முரசொலி அலுவலகமாக இருந்தாலும் சரி சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் சரி எதுவாகா இருந்தாலும் அவையெல்லாம் பஞ்சமி நிலம்தானா என்பதை கண்டறிவதற்கு ஆணையத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும். அந்த ஆணையம் உடனடியாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் அவர்கள் ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.