ETV Bharat / state

'நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்' - டிடிவி தினகரன்

author img

By

Published : May 20, 2020, 12:55 PM IST

TTV dinakaran
TTV dinakaran

சென்னை: நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நான்காவது கட்டமாக மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஆட்டோக்கள் இயங்க அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்வீட்
டிடிவி தினகரன் ட்வீட்


அதில், ”கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல், ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் இதன்மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து ஆட்டோக்கள் இயங்க அனுமதியளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதியில் தளர்வு: அலைபோதும் கூட்டத்தால் கரோனா பரவும் அபாயம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.