ETV Bharat / state

விழி பிதுங்கி நிற்கும் முதலமைச்சர்? - டிடிவி தினகரன் விமர்சனம்

author img

By

Published : Nov 30, 2022, 10:51 PM IST

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது விழி பிதுங்க நிற்கிறார் எனவும்; போதைப்பொருளின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அமமுக சார்பில் அக்கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ.30) ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்ளிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் 'அம்மா உணவகம்' மூலம் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். நல்ல தரமான உணவு குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்திலும் அரசாங்கமே, இதுபோன்ற உணவு அம்மா உணவகங்கள் மூலம் உணவு கொடுத்ததை பல பொருளாதார அறிஞர்களே பாராட்டினார்கள் என்றார்.

மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தவைகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் (அ) அவர்களின் தலைவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். உணவகங்களின் தரத்தை அரசுதான் கண்காணிக்க வேண்டும் என்ற அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கினால், மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என குற்றம்சாட்டினார்.

முழிக்கும் முதலமைச்சர்!: 'திராவிடம் மாடல்' என்று பொய் சொல்லாமல், சின்னத்தனமாக நடந்துகொள்ளாமல் இருக்கவேண்டும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதலமைச்சர் மாட்டிக்கிட்டு முழிக்கிறார். மேலும், இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்த ஆட்சி செயல்படுகிறது என திமுக அரசை சாடினார். இந்த ஆட்சியாளர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறார்கள். மக்களை கண்டுகொள்வது இல்லை எனக் குறிப்பிட்டார்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து விடுவாரா? (அ) போதைக் கலாச்சாரத்தை நிறுத்திவிடுவாரா? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன், அவர் இன்னும் இரண்டு திரைப்படங்கள் அதிகமாக நடிப்பார் என்றார். 'இரட்டை இலை சின்னம்' யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும்” இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: 'பொது இடத்தில் விவாதிக்க தயாரா?' முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.