ETV Bharat / state

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 2,23,613 பயணிகள் முன்பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 5:59 PM IST

Etv Bharat
Etv Bharat

Travel for Diwali Festival: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து 2,734 பேருந்துகளில் 1,36,700 பயணிகள் பயணித்துள்ளதாகவும், இதுவரை 2,23,613 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்தவகையில், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல பேருந்துகளில் இதற்காக முன்பதிவு செய்து ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு எவ்வளவு பயணிகள் பயணித்துள்ளனர் என்பது குறித்து போக்குவர கழக அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (நவ.09) நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2100 பேருந்துகளும், 634 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2734 பேருந்துகளில் 1,36,700 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை, 2,23,613 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்' என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பேருந்துகள்: 'தமிழகம் முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்டநெரிசலை தவிர்க்கும் விதமாக, இன்று முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கபோக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சிறப்பு ஏற்பாடாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களாக பின்வருமாறு;-

கோயம்பேடு பேருந்து நிலையம்: சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்: திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி பணிமனை: பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி மாநகரப் பேருந்து பணிமனை அருகிலிருந்து புறப்படும்.

கலைஞர் நகர் பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கலைஞர் நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்: திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், நகரின் முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன' என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிக முக்கியமான விவகாரம்" - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.