ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகப் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த இடங்களுக்கு எப்படி செல்லலாம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 8:16 PM IST

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்

Traffic diversions at Chennai: சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி சாலையில் மெட்ரோ இரயில் பணி நடந்து வரும் நிலையில் அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்த வழிகளை பயன்படுத்தலாம் என போக்குவரத்து காவல்துறையினர் மாற்று வழிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை: மெட்ரோ இரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி சாலைகளில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த அறியாத வாகன ஓட்டிகள் வழக்கமாக வரும் பாதையில் வந்ததால், போக்குவரத்து போலீசார் சாலையின் இடையில் தடுப்புகள் அமைத்து மாற்று வழியில் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில் மாற்றங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தவெளி மெட்ரோ நிலையங்களில் நடக்க உள்ள பணி காரணமாக சில சாலைகள் மூடப்பட்டுள்ளது.

அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை, லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை, திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரையிலான சாலைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை:

  • GRH பாயிண்டில் (ராயப்பேட்டை அரசு மருத்துவமனை) இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை - வலது - நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளன.
  • ராயப்பேட்டை ஹை ரோட்டிலிருந்து (நெடுஞ்சாலை) GRH நோக்கி வரும் வாகனங்கள் - ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை - இடது நீலகிரிஸ் கடை - மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை - வலது டிடிகே சாலை - கௌடியா மட சாலை வரை செல்லும்.
  • வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை) வி.எம்.தெரு. நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாகச் செயல்படும்.
  • அஜந்தா சந்திப்பில் இருந்து அதி.மு.க. கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.மட் சாலை லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் வரை:

  • ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹை ரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் - வலது லஸ் சர்ச் சாலை-டி சில்வா சாலை - பக்தவச்சலம் தெரு - வாரன் சாலை - செயின்ட் மேரி சாலை - இடதுபுறம் திரும்பி - சி.பி இராமசாமி சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) - இடதுபுறம் ரங்கா சாலை - வலது - கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ - லஸ் சர்ச் சாலை வழியாக பி.எஸ்.சிவசாமி சாலை வலது - சுலிவன் கார்டன் தெரு - இடது - ராயப்பேட்டை உயர் சாலை வழியாகச் செல்லலாம்.
  • கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ, 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டக்கன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
  • சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.
  • மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாகப் புறப்படும் MTC மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம் - மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை - இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாகச் செல்லலாம்.

ஆர்.கே.மட் சாலை திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை:

  • வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி - செயின்ட் மேரிஸ் சாலை - இடதுபுறம் திரும்பி - சிபி ராமசாமி சாலை - காளியப்பா சந்திப்பு - நேராக ஆர் ஏ புரம் 3வது குறுக்குத் தெரு சென்று - காமராஜர் சாலை - ஸ்ரீநிவாசா அவென்யூ - கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மட் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட் சாலை - இடது திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் - வி.கே. ஐயர் சாலை தேவநாதன் தெரு - வலது - செயின்ட் மேரிஸ் சாலை - இடது-ஆர்.கே.மட் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • மந்தைவெளி செல்லும் MTC பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் - செயின்ட் மேரிஸ் சாலை - வலதுபுறம் திரும்பி - சிருங்கேரி மட சாலை மற்றும் VK ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.
  • ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை, ஆகியவை ஒரு வழிப் பாதையாகச் செயல்படும். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.