ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

author img

By

Published : Nov 27, 2021, 3:10 PM IST

top ten news at three pm  top ten news  tamil nadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  பிற்பகல் செய்திகள்
செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1. டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைக் கணக்கிட உத்தரவு - கேகேஎஸ்எஸ்ஆர்

தமிழ்நாட்டில் தொடர் கன மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பயிர் சேதங்களைக் கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2. கனமழையால் வீடுகள் இடிந்து சேதம்: அரசு அலுவலகங்களில் மக்கள் குடியேறிய அவலம்!

மேலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களில் மக்கள் குடியேறிய அவலம் ஏற்பட்டுள்ளது.

3. நீட் விலக்கு மசோதா: ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் நேரில் வலியுறுத்தல்

4. தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. Iridium Scam: ரூ.2.50 லட்சம் கோடியாம்...! - நிஜ ’சதுரங்க வேட்டை’ சம்பவம்; ஒருவர் கைது

வெளிநாட்டு நிறுவனத்திற்கு இரிடியத்தை 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத்தருவதாக தாறுமாறாக வாக்குறுதியை அள்ளிவிட்டு அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான நெடுமாறன் என்பவரை ஏமாற்றியதாக நடிகர் அம்ரீஷ் கைதுசெய்யப்பட்டு வெளியே வந்த நிலையில், இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் தற்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

6. Sexual Harassment: பழனியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

பழனி அருகே செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7. Omicron variant: உலக நாடுகளை மிரட்டும் உருமாறிய கரோனா - பிரதமர் அவசர ஆலோசனை

புதுவகை COVID-19 variant- B.1.1.529 தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான்(Omicron) எனப் பெயர் வைத்துள்ளது.

8. வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைப் பணத்தில் பெண்களின் கல்விக்காக அவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் விடுதி ஒன்றை கட்டியுள்ளார். இதனால் பலரும் தங்கள் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

9. மிகப்பெரிய விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா

மாநாடு படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், எஸ்.ஜே. சூர்யா அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

10. Bigg Boss 5 - கமலுக்குப் பதில் இனிமேல் இவர்தானாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.