ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

author img

By

Published : Nov 25, 2021, 3:13 PM IST

top ten news at three pm  top ten news  three pm news  tamil nadu news  tamil nadu latest news  top news  top ten  latest news  news update  பிற்பகல் செய்திகள்  அண்மை செய்திகள்  செய்திச் சுருக்கம்  மூன்று மணி செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்
செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1. அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

2. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. மலைக்கோயில்களில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ரோப் கார் - சேகர்பாபு தகவல்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைக்கோயில்களிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரோப் கார் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

4. 'தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்'

சென்னை ராயபுரம் பகுதியில் 11ஆவது மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்து தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

5. 'தக்காளி மைதானத்தைத் திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கத் தயார்'

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது.

6. கோவையில் தொடரும் பாலியல் வன்முறை: மாணவி தற்கொலை முயற்சி

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது

அரியலூரில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்ட நிலையில், குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியரையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளளனர்.

8. NFHS-5 : 14 மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், சிறார்களுக்கு ரத்தசோகை

நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

9. Delhi air quality: டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்

தலைநகர் டெல்லியில் காற்று தர அலகு 300ஐ தாண்டி மீண்டும் மோசமடைந்துள்ளது.

10. ஓடிடியில் 'அண்ணாத்த' - விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட சன் பிக்சர்ஸ்

'அண்ணாத்த' திரைப்படம் வெளியான 20 நாள்களில் ஓடிடி (Annaatthe in ott) தளங்களில் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.