ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1PM

author img

By

Published : Sep 5, 2021, 12:55 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

top ten news at 1 pm  top news  top ten  top ten news  latest news  tamilnadu latest news  news updates  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச்சுருக்கம்

1. வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

2. வ.உ.சி 150ஆவது பிறந்தநாள் - பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

3. வஉசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நன்றி - திருமாவளவன்

வஉசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நன்றி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் கூறியுள்லார்.

4. விஜயகாந்த் உடல்நிலை - சத்ரியன் படம் பார்த்த கேப்டன்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக இன்று ட்வீட் செய்திருக்கிறார்.

5. பள்ளிக்கு வர வேண்டாம்... மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு!

காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 766 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7. கேரளாவில் நிபா: எல்லைப்பகுதியை உஷாராக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த 12 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு - கேரளா எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

8. நவரச நாயகனின் “தீ இவன்” படப்பிடிப்பு நிறைவு!

டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துவரும் "தீ இவன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

9. PARALYMPICS: பதக்கத்தை குவிக்கும் இந்தியா; வெள்ளி வென்றார் சுஹாஸ் ஐஏஎஸ்

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

10. PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர்

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்ஹெச்-6 பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.