ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

author img

By

Published : Nov 9, 2021, 9:16 AM IST

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

1. அதிகம் மழைபெய்தால் மதகுகளை திறந்துதான் ஆக வேண்டும் - செம்பரம்பாக்கத்தில் துரைமுருகன்

மழை அதிகமாகப் பெய்தால் ஏரியின் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் என செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வுக்குப்பின்னர் தெரிவித்தார்.

2. Northeast Monsoon: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 14 ஐபிஎஸ் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு 14 ஐபிஎஸ் அலுவலர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

3. முல்லைப் பெரியாறு அணை: ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு நீர்வள ஆதராத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

4. கோடநாடு கொலை வழக்கு: தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான தனபால், ரமேஷின் இருவருக்கும் நீதிமன்ற காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

6. ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த அலுவலர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தியாளர் யோகி அய்யப்பன்.

7. வடகிழக்கு பருவமழை: சிறப்பு அலுவலராக அமுதா ஐஏஎஸ் நியமனம்

வடகிழக்கு பருவமழை நிவாரண கண்காணிப்பு பணிகளுக்கு சிறப்பு அலுவலராக அமுதா ஐஏஎஸ் உள்பட 4 பேர் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

8. முன்விரோதம்: 6 வயது சிறுவனைக் கொலை செய்த பெரியப்பா மகன் கைது

நத்தம் அருகே முன்விரோதம் காரணமாக, 6 வயது சிறுவனைக் கொலை செய்த பெரியப்பா மகனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
9. துபாய் எக்ஸ்போவில் திரையிடப்படும் ஜோதிகாவின் படம்!

துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத் திரை விழாவில், ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

10. ரசிகர்களை ஈர்க்கும் 'ட்ராப் குயின்' ஸ்ரீலீலா!

ஒளியிலே தெரிவது தேவதையா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.