ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 5 PM

author img

By

Published : Jun 19, 2021, 5:50 PM IST

மாலை 5 மணி செய்தி சுருக்கம்
மாலை 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ...

சிவசேனா நிறுவனத் தினம் - 7 மணிக்கு தாக்கரே உரை!

சிவசேனா கட்சியின் 55ஆவது ஆண்டு நிறுவனத் தினத்தை முன்னிட்டு கட்சி தொண்டர்களிடம் இன்றிரவு (ஜூன் 19) 7 மணிக்கு உத்தவ் தாக்கரே உரையாற்றுகிறார்.

'மேகதாது அணை தொடர்பாக பிரதமரிடம் ஸ்டாலின் பேசினார்' அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் மு.க. ஸ்டாலின் பேசியதாகவும், விரைவில் இது தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டீ கடை பூட்டை உடைத்து ரூ.9 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாராணை!

சென்னையில் டீக்கடையின் பூட்டை உடைத்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை கண்காணிப்புக் கேமரா உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் வங்கி ஊழியர் கைது!

ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியரை பொருளாதார குற்றப் பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கோட்டை விட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் ஒளிபரப்பு சேவையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, இன்று (ஜூன். 19) சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்கள், ஓட்டுநர்களும் தலைமறைவு!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்கள், ஓட்டுநர்களும் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது.

தமிழ்நாட்டில் 2,382 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 328 பேர் கறுப்பு பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 111 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.