சென்னை: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க, தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (அக். 9) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 42,920-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை என்பது சர்வேதச பொருளாதார சூழல், அரசியல் சூழ்நிலைகள், அமெரிக்க டாலருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு பிரச்சனைகள், உலக முதலீட்டுளார்களின் முதலீடுகள் என பல்வேறு தரப்புகளை வைத்து தான் தங்கம் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறன.
மேலும், கடந்த இரண்டு வாரமாக டாலரின் ஆதிக்கத்தால் தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த 7ஆம் தேதி சந்தை தொடங்கிய உடன் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,305-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,440-க்கும் விற்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் (Israel-Hamas war) தாக்குதலானது கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தாக்குதல் தொடங்கி நடந்த சில மணிநேரத்தில், இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்தது. இதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்வை சந்தித்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும், அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக அனைவரும், கச்சா எண்ணெயில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்க, கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் தேவையானது இன்று குறைந்துள்ளது.
இதனால், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,365-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,920-க்கும் விற்பனை செய்யபட்டு வருகின்றன. வெள்ளி கிராமுக்கு விலை 50 காசு உயர்ந்து ரூ.75.50-க்கும் ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறன.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% இன்று அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலராக உயர்ந்துள்ளது. அக்.6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்றைக்கு 89 டாலராக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் இதன் தாக்கமாக பெட்ரோல் டீசல் விலை உயருமோ? என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: இனி 3 மணிநேரத்தில் நாகை - இலங்கை பயணம்... சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த செரியாபாணி பயணிகள் கப்பல்!