ETV Bharat / state

பொறியியல் சார்நிலை பணித் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

author img

By

Published : Aug 14, 2021, 1:48 AM IST

பொறியியல் சார்நிலைப் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பொறியியல் சார்நிலைப் பணித் தேர்வு  பணித் தேர்வு  tnpsc combined engineering subordinate services written examination  examination  tnpsc exam  tnpsc  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  அரசுப் பணியாளர் தேர்வாணையம்  டிஎன்பிஎஸ்சி  டிஎன்பிஎஸ்சி தேர்வு
பொறியியல் சார்நிலைப் பணித் தேர்வு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு, வருகின்ற செப்., 18ஆம் தேதி நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அன்று நடத்தப்படவிருந்த ஒருங்கிணணந்த பாெறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, கரோனா பெருந்தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, தமிழ்நாடு அரசின் தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த பதவிக்கான தேர்வு வரும் செப்., 18ஆம் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.