ETV Bharat / state

மின் கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்வது எப்படி?

author img

By

Published : Jul 18, 2020, 7:10 PM IST

Tneb announced how to calculate electricity bill
Tneb announced how to calculate electricity bill

சென்னை: வீடுகளுக்கு கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணங்களின் விவரங்களைத் தெரிந்துகொள்வது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின் அளவீடு கணக்கிடப்படாததாலும், மின் கட்டணங்கள் செலுத்த கால அவகாசங்கள் வழங்கப்பட்டதாலும், மூன்று மாதங்களுக்கான மின் பயன்பாட்டிற்கு ஒரே தவணையாக கட்டணங்கள் விதித்ததால் பல்வேறு தரப்பினரும், மின் வாரியம் மீது குற்றம் சுமத்திவந்தனர்.

இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், பயனீட்டாளர்கள் பயன்படுத்திய மின்சார அளவுகள் கணக்கிடப்படும் எனவும், அவர்கள் செலுத்திய தொகை கணக்கிடப்பட்டு, மீதமுள்ள தொகையிலிருந்து அடுத்த மாதத்திற்கான தொகை கழிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், வீட்டு மின் பயனீட்டாளர்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்கள் அறிந்துகொள்ள மின் கட்டண விவர வலைதளத்திலோ (TANGEDCO - Bill status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான வலைதளத்திலோ (TANGEDCO-online payment portal) தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாத மின் கட்டண தொகையையே (PMC) கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது, என்பதைத் தெரிந்துகொள்ள, மின் பகிர்மான வலைதளத்தின் வாயிலாக, முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.