ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறையும் கரோனா!

author img

By

Published : May 28, 2021, 7:31 PM IST

Updated : May 28, 2021, 11:10 PM IST

CORONA
CORONA

19:19 May 28

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.28) புதிதாக 31 ஆயிரத்து 079 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே 28) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 124 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 31 ஆயிரத்து 79 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 65 லட்சத்து 67 ஆயிரத்து 897 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தி மையங்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இன்று (மே 28) குணமடைந்து 31 ஆயிரத்து 255 பேர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 என அதிகரித்துள்ளது.

மேலும் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 224 பேர், அரசு மருத்துவமனையில் 262 பேர் என மொத்தம்  486 இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்  2,762 பேரும் கோயம்புத்தூரில் 3,937 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட  வாரியாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள்

சென்னை -  4,96,706

செங்கல்பட்டு - 1,36,664

கோயம்புத்தூர் -1,59,762

திருவள்ளூர்  - 98,445

சேலம் -  61,629

காஞ்சிபுரம் - 61,593

மதுரை - 62,603

கடலூர் - 46,720

திருச்சி - 53,854

திருப்பூர்  - 56,354

தூத்துக்குடி - 45,789

திருநெல்வேலி -  42,067

வேலூர்  - 40,958

தஞ்சாவூர் - 44,934

ஈரோடு - 51,401

கன்னியாகுமரி - 46,078

திருவண்ணாமலை - 39,588

தேனி - 34,784

ராணிப்பேட்டை - 33,280

விருதுநகர் - 35,880

விழுப்புரம்  - 32,514

கிருஷ்ணகிரி - 31,296

நாமக்கல்  - 29,544

திண்டுக்கல் - 25,980

திருவாரூர் - 28,093

நாகப்பட்டினம் - 27,089

புதுக்கோட்டை - 21,849

கள்ளக்குறிச்சி - 20,173

தென்காசி - 21,400

திருப்பத்தூர் - 21,541

நீலகிரி - 17,448

தர்மபுரி -17,617

ராமநாதபுரம் - 15,869

கரூர் - 15,744

சிவகங்கை - 13,814

அரியலூர் - 10,510

பெரம்பலூர் - 7,623

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428
 

Last Updated :May 28, 2021, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.