ETV Bharat / state

புயலுக்குப்பின் திறக்கப்பட்ட பள்ளி கல்லூரிகள்: நேரடி ஆய்வில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 5:13 PM IST

கப்பட்ட பள்ளி கல்லூரிகள் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்
சென்னையில் புயலுக்குப்பின் திறக்கப்பட்ட பள்ளி கல்லூரிகள் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்

மிக்ஜாம் புயலுக்குப் பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று(டிச.11) திறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளிகளில் தலைமைச் செயலாளர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் புயலுக்குப்பின் திறக்கப்பட்ட பள்ளி கல்லூரிகள் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்

சென்னை: மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4ந் தேதி முதல் 9வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்தது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 4மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம் போல் இன்று(டிச.11) திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி டாக்டர் சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி, படூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மட்டும் வெள்ள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பள்ளிகள் திறக்கவிருந்த நிலையில், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், "மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு கிரிமி நாசினி பவுடர் தெளிக்க வேண்டும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க அனைத்தும் தயார் நிலையில் வைக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

சென்னை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பிற மாவட்டங்களில் பள்ளிகள் இன்று(டிச.11) திறக்கப்படும் நிலையில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் சென்னையிலுள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுப்பட்டிருந்தது. அதன்படி கிண்டி மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் இன்று(டிச.11) சீரமைப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பெருநகர சென்னை மாநகாட்சி இணை ஆணையர் சரண்யா ஹரி ஆகியோர் உடனிருந்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மாகாண மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கான வகுப்பறைகள் மட்டும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளி வளாகத்தில் சேர்ந்த குப்பைகள் அனைத்தும் மாநகராட்சியால் அகற்றப்படாமல் குப்பை மேடாக காட்சியளித்தன. தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தகவலை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேப்போல் பொதுப்பணித்துறையினரும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, திருவெற்றியூர் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீரும், புயலால் ராட்சத மரங்கள் பள்ளி வளாகத்தில் விழுந்து கிடப்பதையும் தற்போது வரை அகற்றப்படவில்லை என மாணவர்களின் பொற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக பள்ளிகளில் தேங்கி இருந்த மழை நீர் முழுமையாக அகற்றபட்டு விட்டது என்றும் பள்ளிகள் திங்கட்கிழமை(11.12.2023) முதல் இயங்கும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளியின் நுழைவு முதல் வாளகம் முழுக்க மழை நீர் தேங்கியிருப்பதால் பள்ளிக்குள் செல்ல மாணவர்களும் தயக்கம் காட்டி சாலையிலேயே நின்றனர்.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் செனாய் நகர், புல்லா அவென்யூவில் இன்று(டிச.11) திறக்கப்பட்ட சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 95 சதவீத மாணவிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை மூலமாக மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கு மாம்பலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்களின் வருகை பெருமளவில் இருந்தது.

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கல்வி கற்பதற்கான சுற்றுச்சூழல் முழுவதுமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், சென்னையில் உள்ள பல பள்ளிகளில் ப்ளீச்சிங் பவுடர் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.