ETV Bharat / state

மாநில அரசின் சில மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? - மவுனம் கலைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:12 PM IST

tn-governor-rn-ravi-interview-at-sansad-central-govt-tv-channel
ஆளுநர் மக்களின் நலனுக்காகவும், பாரத் நலனுக்காகவும் இருக்க வேண்டும் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

TN Governor RN Ravi: "செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்" மற்றும் "வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வம் என்று கும்பிடடி பாப்பா" என மகாகவி பாரதியின் பொன் மொழிகளை கூறிய பாரத் பெருமை பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசிற்குச் சொந்தமான Sansad தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, "ஆளுநருக்கு பல்வேறு கடமைகள் உள்ளது. அரசியலமைப்புக்கு அறநெறிகளுக்கு உட்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டும். ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் மாநிலத்தில் நாம் பணி அமர்த்தப்பட்டுள்ளோம். அந்த மாநில மக்களுக்காக அரசியலமைப்புக்கு அறநெறிகளுக்கு உட்பட்டு பணியாற்றுவதே முக்கிய பணி ஆகும். சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்.

நமது பாரத நாடு தனித்துவம் வாய்ந்தது. பாரத் 1000 நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் மற்றும் பரிணாமங்களைக் கொண்டுள்ளது. மாநிலம் என்பது அரசியல் அமைப்புகளுக்காகவும், நிர்வாகத்திற்காகவும் எல்லைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்களின் நலனுக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலங்கள் 100 வருடங்கள் பழமையானவை இல்லை. இன்னும் பல மாநிலங்கள் வரும் காலங்களில் உருவாக வாய்ப்பு உள்ளது. மாநிலங்கள் அனைத்து பாரத்தின் உள்ளே உள்ளது.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் எம்பி கௌதம சிகாமணி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

இந்தியா என்றால் என்ன? இந்தியா என்பது பாரத். முதலில் பாரத் என்று அழைத்து வந்தோம். தற்போது, இந்தியா என அழைக்கிறோம். பாரத் என்பது ஒரு குடும்பம். தமிழ்நாடு பொறுத்த வரையில் மிக உயர்ந்த தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக மகாகவி சுப்பிரமணிய பாரதி கூறும் போது "செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்" எனக் கூறுகிறார். பாரத் பல்வேறு மொழிகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதயத் துடிப்பு என்பது ஒன்றுதான் எண்ணங்கள் ஒன்று தான். அது தான் பாரத்.

ஆளுநர் மக்களின் நலனுக்காகவும், பாரத் நலனுக்காகவும் இருக்க வேண்டும். மாநில அளவிலான அறிவிப்புகளைத் தேசிய அளவிலான தாக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஆளுநர்களுக்கு உள்ளது. மகாகவி பாரதி கூறியதை இங்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது பாரத் பற்றி பல்வேறு கவிதைகளைத் தெரிவித்துள்ளார். "வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வம் என்று கும்பிடடி பாப்பா" இதைத் தான் தினம் சொல்லிக் கொண்டு என் பணிகளைத் தொடங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு.. மேலும் 4 கோடி ரூபாய் பறிமுதல் என தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.