நஷ்டத்தில் இயங்கினாலும் போக்குவரத்து துறையை அரசு தொடர்ந்து இயக்கி வருகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

author img

By

Published : Dec 29, 2021, 11:42 PM IST

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி ()

ரூ.46,457 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் மீதான அக்கறையில் அரசு போக்குவரத்து துறையை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14ஆவது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 65 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நிதித்துறை இணை செயலாளர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்ட நிலையில் சுமார் நான்கு மனி நேர பேச்சுவார்த்தைக்கு பின் தேதி அறிவிக்கபடாமல் கூட்டம் ஒத்திவைக்கபட்டது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், "நிதி நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க உள்ளோம்.

இன்னும் சில மாதங்களில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கபட்டு, பல புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன.

ரூ.46,457 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் மீதான அக்கறையில் போக்குவரத்து துறையை அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கமலக்கண்ணன், "பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டா காசுகள் வழங்கப்படுவதில்லை. தற்போது பேருந்துகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும்"என்றார்.

தொ.மு.ச தொழிற்சங்கம் பொதுசெயளாலர் சண்முகம் பேசும்போது, "கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து வழிதடளங்களை தனியாருக்கு விட்டு கொடுக்கபட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் செல்லும் அனைத்து இடங்களிலும் அரசு பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விதிக்கபட்ட தண்டனை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முன்னேற்றமாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தை இறுதியாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: Clash between Prisoners: மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குள் மோதலால் பரபரப்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.