ETV Bharat / state

"அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வராதீர் - தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் உதவி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 7:38 PM IST

M.K.Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M.K.Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசரக் கட்டுபாட்டு மையத்தை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச. 2) காலை முதல் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திரா கடற்கரை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்க உள்ளது.

இதனால் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேலும், இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தங்களது பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு துணைநிற்க வேண்டும் என உத்தரவிட்டார்.

  • மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.#CMMKSTALIN | #TNDIPR | #களத்தில்_முதலமைச்சர் | pic.twitter.com/VX0EsjkvN4

    — TN DIPR (@TNDIPRNEWS) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அவரச கால உதவி எண்கள் மற்றும் முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் உள்ளிட்டோரை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில பேரிடர் அவசரக் கட்டுபாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் மாற்றுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியும் கை பேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.#CMMKSTALIN | #TNDIPR | #களத்தில்_முதலமைச்சர் |@CMOTamilnadu pic.twitter.com/4pL6fy1WEF

    — TN DIPR (@TNDIPRNEWS) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மீனவர்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிக காற்றுடன் மிக கனமழை பெய்யும் என்பதால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். அமைச்சர்களும் பல்வேறு மாவட்டங்களில் களப்பணி ஆற்றி வருகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் பகுதிகளில் செயலாற்றி வருகிறார்கள்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்கும் அரசியல் நையாண்டி கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல வேண்டியதில்லை. முதலில் மக்களைப் பாதுகாப்பது தான் இப்போதைய முதல் இலக்கு. இந்த நேரத்தில் எங்கு பாதுகாப்பு பணி தேவைப்படுகிறதோ அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தேவை இருக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து உதவி கேட்கப்படும். களப்பணி ஆற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..! யார் இந்த வெங்கட ரமண ரெட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.