ETV Bharat / state

3 வயது ரஷ்ய சிறுவன் உயிரைக் காப்பாற்றிய சென்னை மருத்துவர்களைப் பாராட்டிய முதலமைச்சர்!

author img

By

Published : Jul 28, 2020, 2:03 AM IST

பேபி
பேபி

சென்னை: இதய செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்யாவைச் சார்ந்த மூன்று வயது சிறுவனுக்கு, முதல் முறையாக பீடியாட்ரிக் இதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த எம்ஜிஎம் மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.

செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனின் உயிரை சென்னையிலுள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை இங்கிலாந்து, ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், இந்தியாவில் அறுவைச் சிகிச்சை குழுவினர் ஆகியோரின் உதவியோடு, எம்ஜிஎம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்து அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஷ்ய நாட்டின் மூன்று வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பீடியாட்ரிக் இதய அறுவைச் சிகிச்சை முறையான “Biventricular Berlin Heart Implantation” என்ற அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்குப் பெருமைசேர்தத MGM Health Care மருத்துவமனையின் மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாகக் கலந்துரையாடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களைப் போன்று, தமிழ்நாடு மருத்துவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.