ETV Bharat / state

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க பாடுபடுவோம் -சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

author img

By

Published : Apr 9, 2019, 5:36 PM IST

COLLEGE PRISEDANCE

சென்னை: அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்லூரிகளுக்கான முதல் இடத்தினை பெறுவதற்கு வரும் ஆண்டுகளில் பாடுபடுவோம் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன் தெரிவித்தார்.


இந்தியளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேசிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்டார். அந்தப் பட்டியலில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ராவணன் செய்தியாளரிடம் கூறியதாவது, 'அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த எங்கள் கல்லூரி இந்தாண்டு மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன்
Intro:அகில இந்திய தர வரிசைப் பட்டியலில்
முதலிடத்தை பிடிக்க பாடுபடுவோம்
மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன் பேட்டி


Body:சென்னை, அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்லூரிகளுக்கான முதல் இடத்தினை பெறுவதற்கு வரும் ஆண்டுகளில் பாடுபடுவோம் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன் தெரிவித்தார்.
இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தேசிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். அந்தப் பட்டியலில் கல்லூரிகளில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அக் கல்லூரியின் முதல்வர் ராவணன் செய்தியாளரிடம் கூறியதாவது, அகில இந்திய தர வரிசை பட்டியலில் கடந்தாண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த தங்கள் கல்லூரி இந்த ஆண்டு மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளோம்.
இதற்கு முக்கிய காரணங்களாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை முழுமையாகப் பெற்ற அளிக்கப்படுகிறது. கல்லூரியில் பணிபுரியும் அனைவரும் முழு நேர பணியாளர்களாக உள்ளனர். மாணவிகளும் அதிகளவில் பயின்று வருகின்றனர். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தாண்டு தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கமுள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மேலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாய்ப்பினை பெற்று தந்துள்ளோம். மேலும் தங்கள் கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த ஆண்டு 60 நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 300 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 500 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள்,ஐஏஎஸ் தெருவில் போன்றவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் கல்வியாண்டில் புதிதாக பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் முதல் 5 இடங்களை பிடித்த கல்லூரியில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாவது இடம் பெற்றுள்ளது. மற்ற நான்கு கல்லூரிகளும் டெல்லியில் உள்ளவை ஆகும் என கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.