ETV Bharat / state

‘அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்’ - திருநாவுக்கரசர்!

author img

By

Published : Aug 5, 2023, 9:11 PM IST

அண்ணாமலை செல்வது பாத யாத்திரை அல்ல ரத யாத்திரை, தான் அதற்கு பாஜகவினர் காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
அண்ணாமலை செல்லும் ரத யாத்திரைக்கு காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள்

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. உண்மை எப்போதும் வெற்றி பெறும். நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பணியாற்ற விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மீண்டும் செயல்பட கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், நடுநிலை பொதுமக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவை கொண்டாடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். திமுக தலைவர் ஸ்டாலின் கூட ராகுல்காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என கூறியுள்ளார். கூட்டணி கட்சிகள் மத்தியில் ராகுல்காந்திக்கு ஆதரவு பெருகி வருகிறது. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் தேர்தல் முடிந்த பின் கண்டிப்பாக ஆதரிக்க கூடும். கூட்டணியில் அதிக இடங்களை பெற கூடிய வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தான் உள்ளது. மாநிலங்களில் கட்சிகள் நின்றாலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தான் நிற்க முடியும்.

இந்தியா கூட்டணி பெயர் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது. பெயர் வைப்பது எல்லாம் கேட்டு வைக்க முடியாது. இந்தியா என்ற பெயரை தவறாக தான் பயன்படுத்த கூடாது. அண்ணாமலை பாத யாத்திரையாக போகவில்லை. பஸ் யாத்திரையாக தான் செல்கிறார். நகரங்களில் பஸ்சில் இருந்து இறங்கி 10 நிமிடங்களில் பேசிவிட்டு அடுத்த இடத்திற்கு செல்கிறார். வாகனங்களில் செல்லும் நேரங்கள் தான் அதிகம்.

பாஜகவினர் காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள். பாத யாத்திரை அல்ல ரத யாத்திரை தான். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எல்லோரும் கண்டிக்க தான் செய்தார்கள். சீமான் பேசுவது எல்லாம் 100 சதவீதம் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயிற்சி செய்த போது காங்கிரஸ் தான் அனுமதித்தது. ராஜீவ் காந்தி கொலைக்கு பின் தான் மாறியது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை யாரும் நியாயப்படுத்த வில்லை.

மணிப்பூரில் நடந்த அநியாயத்தை பாஜக தட்டி கேட்கவில்லை. மத்திய, மாநில பாஜக அரசுகள் எதுவும் செய்யவில்லை. மற்ற நாடுகளில் நடந்த சம்பவங்களை ஒப்பீட்டு பேசுவது சரியல்ல. மணிப்பூரில் சிறுபான்மை மக்கள் நடந்தது கொடுமையானது. இதை கண்டித்து தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும். சீமான் பேசுவதற்கு அவர் தான் பொறுப்பு. சிறுபான்மை மட்டுமல்ல பெரும்பான்மை ஒட்டும் வேண்டும். பெரும்பான்மை ஒட்டு வேண்டும் என்பதற்காக சிறுபான்மை மக்களை கஷ்டப்படுத்த கூடாது” என கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் உலா வரும் டபுள் டெக்கர் பேருந்து… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.