ETV Bharat / state

மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

author img

By

Published : Jan 18, 2023, 4:08 PM IST

மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

சென்னை: திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அந்த கால கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு, உடனடியாக திருச்சி போலீசார் விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த கொலை வழக்குத்தொடர்பாக குற்றவாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்காததால், அதன் பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பல கட்ட விசாரணைகள் நடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், சிபிஐயின் விசாரணைக்கு உதவுவதற்காகவும் சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தனர்.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் எஸ்.பி.யாக சிபிசிஐடியின் எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். பத்துக்கும் மேற்பட்ட டி.எஸ்.பிக்கள் அடங்கிய குழுவானது விசாரணையை துரிதப்படுத்தியது. குறிப்பாக ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும்படியான பிரபல ரவுடிகள் 13 பேரின் செல்போன் இணைப்புகள் ஆக்டிவாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.

இந்த 13 பேரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தகோரி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால், அதில் ஒருவர் மட்டும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் 12 பேரையும் விசாரிக்க மத்திய தடயவியல் நிபுணர்கள் குழு சென்னை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

முதல் கட்டமாக இன்று(ஜன.18) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வு சோதனை கூடத்தில் சந்தேகிக்கும் நபர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ் மற்றும் சத்யராஜ் ஆகிய நான்கு பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்காக ஆஜராகினர்.

நான்கு பேருடன் அவர்களுடைய வழக்கறிஞரும் விசாரணையின்போது உடன் இருப்பார்கள். ஏற்கனவே நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர், உண்மை கண்டறியும் சோதனையின்போது, ராமஜெயம் வழக்கு குறித்து மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை குறித்து விசாரணை அதிகாரிகள், இதில் சந்தேகப்படும் நபர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 15க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு, அப்படி கேட்கப்படும்போது அவர்களுடைய நாடித்துடிப்பு மற்றும் பிற உடல் அளவீடுகளை பதிவு செய்து அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, அவர்கள் கூறும் பதில்கள் உண்மையானவையா அல்லது உண்மைக்கு மாறானவையா என்பதை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்கள்.

நான்கு பேரில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, ஒன்றன்பின் ஒன்றாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள எட்டு பேர்களிடம் நாளை விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை என்பது என்ன? உண்மை கண்டறியும் சோதனை என்பது Narco analysis என வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது. அதன்படி, சந்தேகத்திற்குரியவர்களுக்கு மயக்க மருந்தை செலுத்தி, அவர்களை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று, அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழகமா? தமிழ்நாடா? விளக்கம் அளித்த ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.