ETV Bharat / state

சென்னை பல்கலையில் தாமதமாகும் தேர்வு முடிவுகள்.. முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

author img

By

Published : Aug 16, 2023, 8:49 PM IST

Etv Bharat
Etv Bharat

University of Madras: சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.1ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் உள்ள 24,341 இடங்களுக்கான சேர்கை விண்ணப்பம் குறித்த வழிகட்டுதல்களை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்திக் வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மையங்களின் விபரத்தையும் www.tngasa.in மற்றும் www.tngasa.org முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.58, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலமாகவும் இணையதள மூலமாகவும் செலுத்தலாம்.

இணையதள மூலமாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai–15 என்ற பெயரில் ஆகஸ்ட் 14 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மேலும் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 ஆகிய தொடர்பு எண்களில் தெரிந்துக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்பில் 24,341 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆக.21 முதல் இளங்கலை பட்டப்படிப்பில் 9820 காலியிடங்களுக்கு நேரடி மாணவர்கள் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.