ETV Bharat / state

திருமண நிகழ்ச்சியில் நாதஸ்வரத்திற்கு பதிலாக சாக்சோபோன் வாசித்த சிறுவன்!

author img

By

Published : Jul 13, 2020, 7:26 AM IST

சென்னை அருகே கரோனா முழு ஊரடங்கில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நாதஸ்வரத்திற்கு பதிலாக 11 வயது சிறுவன் சாக்சோபோன் வாசித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமண நிகழ்ச்சி
திருமண நிகழ்ச்சி

சென்னை மாவட்டம் திருவேற்காடு, ராஜரத்தினம் நகர் பகுதியை சேர்ந்த வினோத் குமார்-இந்திரா ஆகிய ஜோடிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருமணம் தள்ளிபோனது. இந்நிலையில் நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், வினோத் குமார்- இந்திரா ஆகியோரின் திருமணம் எளிய முறையில் திருவேற்காடு நாகவள்ளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

நாதஸ்வரத்திற்கு பதிலாக சாக்சோபோன் வாசிக்கும் சிறுவன்

இந்த திருமணத்தில் அவர்களது உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தில் வந்த அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா என்பதை கண்காணிக்க உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டதோடு, அனைவருக்கும் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தகுந்த இடைவெளியுடன் எளிய முறையில் நடைபெற்ற, இந்தத் திருமண நிகழ்ச்சியில் 11 வயது சிறுவன் திருவருள்பிள்ளை நாதஸ்வரத்திற்கு பதில் சாக்சோபோனில் மங்கள வாத்தியங்கள் வாசித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: தொலைக்காட்சி வழியே பாடங்களை ஒளிபரப்பும் செயல்முறையை வரவேற்கும் ஆசிரியர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.