ETV Bharat / state

சிறுமி டான்யாவிற்கு 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

author img

By

Published : Jan 6, 2023, 10:26 AM IST

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றி
முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு குறையவில்லை.

மருத்துவர்கள் விளக்கம்

ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி கோரிய நிலையில், அமைச்சர் சா.மு.நாசர் மேற்பார்வையில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சிறுமி டானியாவை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார்.

அதன்பின் மருத்துவரின் பரிந்துரையின் படி சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன்படி இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக நேற்று (ஜனவரி 5) தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடைபெற்றது.

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக சிறுமியிடம் நலம் விசாரித்தார். அதன்பின் 11 மருத்துவர்கள் 2ஆம் கட்ட அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சையில் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் சிறுமியிடம் நலம் விசாரித்தனர்.

இதையும் படிங்க: Video: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தலைகீழாக நின்று விநோதப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.