ETV Bharat / state

Mega Vaccination Camp: இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம்

author img

By

Published : Nov 21, 2021, 1:15 PM IST

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
அமைச் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டிசர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம் (Mega Vaccination Camp) 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

சென்னை: எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள கத்திவாக்கம் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் 10ஆவது மெகா தடுப்பூசி முகாமை இன்று (நவ.21) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Minister Ma. Subramaniyan) தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களிலும், சென்னையில் 1,600 மையங்களிலும் இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

முதலமைச்சரின் ஆலோசனைப்படி கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்ட இல்லம் தேடி தடுப்பூசி மற்றும் மருத்துவத் திட்டத்தின்கீழ் 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

அம்மா கிளினிக்

முதல் டோஸ் தடுப்பூசி 70 விழுக்காடு பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 35 விழுக்காடு (covid 19 vaccine) பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடம் தயக்கம் இருந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக தற்போது மக்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் டெங்கு, மலேரியா குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. டெங்குவால் பாதிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அம்மா கிளினிக்குக்கு மாற்றாக இல்லம் தேடி மருத்துவம் திட்டம் கொண்டுவரப்படவில்லை.

இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்துவிட்டு அவசர அவசரமாக அம்மா கிளினிக் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டன. இதற்காக சுமார் 1,900 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் ஒரு செவிலியர் கூட தேர்வு செய்யப்படவில்லை.

அம்மா கிளினிக் மூலம் பயன்பெற்றவர்கள் விவரத்தையும், அம்மா கிளினிக்கில் பணியமர்த்தப்பட்டவர்களின் விவரத்தையும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்

நம் நாடு ஜனநாயக நாடு. ஆசிய நாடுகள் போல தடுப்பூசி போடவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என ஆணையிட முடியாது. பொது இடங்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் தான் செல்லவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் இதைப்புரிந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரசாணைக்குப் பிறகு பொதுமக்கள் சினிமா, மால்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Trichy SSI Murder: திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.