ETV Bharat / state

முதல் முறையாக ஹஜ் பயணம்:மானியத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

author img

By

Published : Aug 9, 2023, 3:23 PM IST

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தலா ரூ.25,070/- வீதம் மானியத் தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை
Chennai

சென்னை: இஸ்லாமியர்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதான புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் ஹஜ் மானியமாக 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070/- வீதம் ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசின் முன்னெடுப்பின் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் ஏற்கனவே வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: சென்சார் வேலை செய்யாவிட்டாலும் சந்திரயான்-3 தரையிறங்குவதில் சிக்கல் இல்லை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

அதற்காக இந்த ஆண்டு தமிழக அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,070/- வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 09) தலா ரூ.25,070/-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் சேகர் பாபு - எச்.ராஜா வெளியிட்ட தகவல்

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நசிமுத்தின், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., சிறுபான்மை நல இயக்குநர் திருமதி மு. ஆசியா மரியம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் காவல்துறை சித்திரவதை தடுக்கப்பட வேண்டும்: வழக்கறிஞர் ஹென்றி டிபேன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.