ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து; கருவிகளுக்கு பதிலாக பாட வேண்டும்... அரசு உத்தரவு...

author img

By

Published : Dec 10, 2021, 8:35 PM IST

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நாடு அரசு, தமிழ்த்தாய் வாழ்த்து

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதால் அவற்றில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

குறிப்பாக எந்தவித தேசப்பற்றோ, தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நின்றுவிட்டு அமர்கின்றனர். எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போகிறது. எனவே, இனி வரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக விழாவை நடத்துவோர், இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடபட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.