ETV Bharat / state

AIADMK vs BJP: மாமூல் வாங்கி வேலை பார்த்தவர் அண்ணாமலை - சுடுசொற்களால் சாடிய சி.வி. சண்முகம்

author img

By

Published : Jun 13, 2023, 3:37 PM IST

Updated : Jun 14, 2023, 11:18 AM IST

bjp admk controversy
பாஜக அதிமுக சர்ச்சை

திமுகவின் ஏஜண்டாக அண்ணாமலை செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சென்னை: தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்தார். அதில் 1991-96 ஊழல் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன்" எனக் கூறியிருந்தார்.

அண்ணாமலை பதிலளித்த 1991-96 காலகட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்காக ஜெ.ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும், அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், “பாஜக மாநிலத்தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணாமலையின் விமர்சனப்போக்கு இவ்வாறு தொடர்ந்தால் அதிமுக-பாஜக கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையான விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், “அண்ணாமலை ஆங்கில பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை ஒழுங்காகப் படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான். பெரியண்ணன் வேலை இங்கே யாருக்கும் கிடையாது. அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தைச் செடி என்று சொல்வதா?" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஜூன் 13) அதிமுக பொதுச்செயலளார் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், எங்கள் புரட்சி தலைவி அம்மாவைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த யோக்கியதையும் தராதரமும் இல்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் இந்த அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவின்சிலாராகக்கூட பதிவி வகிக்காத அண்ணாமலைக்கு பல்வேறு ஊழல் செயல்களில் பங்கு உள்ளதாக உள்கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருட்டு சாராயம் விற்ப்பவர்கள், குற்றம் நிறைந்தவர்களுக்கு மட்டுமே பதவி பொறுப்பு வழங்கியவர் தான் இந்த அண்ணாமலை. உங்களுடைய பெருந்தலைவர்கள் அன்று ஆளுமை பெற்ற எங்கள் தலைவரான ஜெயலலிதாவை வந்து சந்தித்தனர். ஆளுமைப் பெற்ற எங்கள் புரட்சி தலைவி அம்மாவைப்பற்றி பேசுவதற்கு முன்னாள் காவல் அதிகாரியான அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு கூட தகுதி இல்லை. இந்தியாவிலேயே அதிக ஊழல் பெற்ற கட்சியென்றால் அது பாஜகவின் ஆட்சியில் தான். அதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போதெல்லாம் அவர் அந்தக் கட்சியில் கூட இல்லை, எங்கேயவது மாமுல் வாங்கிக்கொண்டிருந்திருப்பார்.

நாங்க வளர்ந்துவிட்டோம் என பிதற்றிக்கொண்டால் செல்லுங்கள், அதிமுக போன்ற பெரிய கட்சியான எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பாஜாகவின் மூத்த தலைவர்களான நட்டா, அமித்ஷா அன்று கூட்டணி குறித்து கூறும் போது, அண்ணாமலையின் மௌனத்திற்கான காரணம் என்ன. நான் முன்னதாகவே கூறியது போல், அண்ணாமலை திமுக வுடன் கைகோர்த்து கொண்டு திமுகாவின் பி டீமாகவும் திமுகவின் ஏஜண்டாகவும் செயல்பட்டு வருகிறார். பாஜாகவின் கோட்பாடு வேறாகவும் அண்ணாமலையின் கோட்பாடு வேறாகவும் உள்ளது.

செந்தில் பாலாஜி வீட்டிற்கு ரைட் வரும் தகவலை அதிகார அறிவிப்புக்கு முன்பாக செந்தில் பாலாஜியிடம் கூறியது யார்? வருமான வரித்துறையின் போது பெண் அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் அது குறித்து ஏன் இவர் வாய் திறக்கவில்லை. எங்கள் கட்சியின் தயவு வேண்டாம் என்று உதறி தள்ளிவிடும் தைரியம் உங்களுக்கு இருந்தால் செல்லுங்கள் பார்க்கலாம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைத்தூக்கிய அதிமுக - பாஜக மோதல்.. கூட்டணியை முறிக்க திட்டமா?

Last Updated :Jun 14, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.