ETV Bharat / state

கைதிகள் துணிகளை துவைக்க ரூ.60 லட்சத்தில் வாஷிங் மெஷின் - சிறைத்துறை ஏற்பாடு

author img

By

Published : Feb 17, 2023, 9:34 AM IST

கைதிகள் துணிகளை துவைக்க வாஷிங் மெஷின்
கைதிகள் துணிகளை துவைக்க வாஷிங் மெஷின்

சிறைவாசிகள் தங்கள் துணிகளை எளிதாக துவைக்க 60 லட்சம் ரூபாய் செலவில் 15 பெரிய வாஷிங் மிஷின்கள் சிறைத்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

கைதிகள் துணிகளை துவைக்க வாஷிங் மெஷின்

சென்னை: தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள் உட்பட மொத்தம் 142 சிறைகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு படிப்பு, தொழில், என பல வசதிகள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பிறகு சிறைக்கைதிகளுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறைக்கைதிகளை சந்திக்க வரும் அவரது உறவினர்களிடம் எளிமையாக பேசும் வகையில் இண்டர்காம் வசதியும், சிறைக்கைதிகள் வெளியே சென்றவுடன் எளிதாக வேலை கிடைக்கும் வகையில் ஆதார் கார்டு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக சிறைகளில் ஆபத்தான குற்றவாளிகளைக் கண்காணிக்கச் சுற்றுக்காவல் செல்லும் காவலர்களுக்கு 46 லட்சம் ரூபாய் செலவில் 50 பாடி ஒர்க் கேமராக்களும் வாங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் சிறைகளில் உள்ள சிறைவாசிகள் தங்களது துணிகளை எளிதாக துவைக்கும் வகையில் 60லட்சம் ரூபாய் செலவில் பெரிய வாஷிங் மெஷின்கள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

சிறைகளில் ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் உள்ளதால் அவர்கள் தங்களது துணிகளை துவைக்க அதிகப்படியான நேரம் மற்றும் தண்ணீர் செலவாகிறது. இதனை கட்டுப்படுத்துவற்காக வெளிநாட்டு சிறைகளில் உபயோகப்படுத்தப்படும் வாஷிங் மெஷின்களை போல தமிழக சிறைகளில் வழங்க முடிவு செய்து வாங்கப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக சிறைவாசிகள் தங்கள் உடைகளைத் துவைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள வாஷிங் மெஷின்களை துவக்கும் நிகழ்வு இன்று புழல் மத்திய சிறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி கலந்துகொண்டு சிறைவாசியான பிரேம் குமார் என்பவரை ரிப்பன் வெட்டி வாஷிங் மெஷின் இயந்திரத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: சுய தொழில் தொடங்க புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.